திருச்சியில்
வருவாய் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம்.
தமிழ்நாடு அரசு வருவாய் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மத்திய மண்டல தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சரவணன், துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசுத் துறையில் உள்ள ஓட்டுநர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
படித்தவர்களுக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தர ஊதியம் மற்றும் ஓட்டுநர்களுக்கு 3 சென்ட் வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.