பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இந்திரா கணேசன் கல்லூரியின் உதவி பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருச்சி மாவட்ட பட்டதாரிகளுக்கான பேரவை உறுப்பினர் தேர்தலில் இந்திரா கணேசன் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ராதிகா பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பேரவை உறுப்பினருக்கான ஆணையை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்கள் முனைவர் ராதிகாவுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் கணேசன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர் ராதிகாவுக்கு இந்திரா கணேசன் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் இன்ஜினியர் ராஜசேகர் மற்றும் இயக்குனர் முனைவர் பாலகிருஷ்ணன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

