தையல் பயிற்சி முடித்த 100 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி.
திருவெறும்பூர் கிங் லுக்ஸ் தையல் பயிற்சி பள்ளி சார்பில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருச்சி மத்திய பிரதேசம் அருகில் உள்ள அருண் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைவர் எஸ்.எஸ். முருகன் 6 மாத தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசும்போது, தமிழக அரசு ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் சான்றிதழ் இல்லாமல் அந்த சலுகையை பெற முடியாமல் பலரும் இருக்கின்றார்கள்.
முறையாக தையல் படித்திருந்தாலும் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசனுடைய நலத்திட்டத்தை பெற முடியும்.
இன்றைய திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 110 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சான்றிதழ் பெற்ற அனைவரும் தரமாய்ந்த தையல் கலைஞர்.அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே ரெடிமேட் ஆடைகளை அருமையாக தைத்து தருவார்கள்.
அவர்களுக்கு அரசின் இலவச தையல் மெஷின் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் எனக் கூறினார்.