திருச்சியில் டாக்டர் பிருந்தா ஸ்கின் கேர் கிளினிக் சார்பில் மாபெரும் இலவச விழிப்புணர்வு மருத்துவ முகாம்.
திருச்சி ஜெயில் கார்னர் பொன்மலைப்பட்டி சாலை ஹைவேஸ் காலனியில் அமைந்து உள்ள டாக்டர் பிருந்தா ஸ்கின் கேர் கிளினிக் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் டாக்டர் பிருந்தா தலைமையில் நடைபெற்றது.
முகாமை தொழிலதிபர் கே.டி.தங்கராஜ் துவக்கி வைத்தார்.
இம் முகாமில் பொது தோல் நோய்கள்,
ஒவ்வாமை தோல் நோய்கள்.
முடி உதிர்தல் பிரச்சினை.முகப்பரு.வடு, மரு,மச்சம் நீக்குதல்,
முக பொலிகளுக்கான சிகிச்சை,
நகம் சம்பந்தமான சிகிச்சை,
சொரியாசிஸ்,
வெண்புள்ளி,
ஆணிக்கால்.
சிரங்கு/ படர்தாமரை,
வழுக்கை,
இளநரை
போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
.முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராஜா,மருத்துவமனை ஊழியர்கள் இந்த முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்.
இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.