திருச்சியில் தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை, அமைச்சு பணியாளர்கள் சங்க இணைப்பு விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது .
தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் இணைப்பு விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
சென்னை நில அளவை மற்றும் நில வரி திட்ட ஆணையரக கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்
காலியாக உள்ள 128 இளநிலை உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்,
122 உதவியாளர் பணியிடங்களை பணியாளர் மறுசீரமைப்பு குழுவின் மூலம் அரசுக்கு ஒப்படை செய்யும் முடிவை திரும்ப பெற்று இத்துறையிலேயே பயன்படுத்த வேண்டும்,
வட்ட அலுவலகங்களில் பணியாற்றும் நில அளவை பணியாளர்களின் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனைத்து வட்டங்களுக்கும் தலா ஒரு இளநிலை உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மேலும் இக்கூட்டத்தில்
திருச்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் முகமது ஷக்கீர், திருச்சி மண்டல துணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் சுகுமார், திருச்சி மண்டல துணை இயக்குநர் அலுவலக உதவியாளர் அனுராதா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.