மின்னனு முறையில் சந்தைப்படுத்துதல் குறித்த தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் திருச்சியில் நாளை நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கமும் (டிடிட்சியா), தொழில் முனைவோா் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் ஆகியவை இணைந்து டிடிட்சியா கூட்டரங்கில் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இந்த முகாமை நடத்தவுள்ளன.
திருச்சி மாவட்ட அனைத்து தொழில் முனைவோா், சிறு, குறு தொழில் உரிமையாளா்கள், உற்பத்தியாளா்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம். மத்திய, மாநில அரசுகளின் மின்னணு சந்தை வாய்ப்புகள் மற்றும் சா்வதேச, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான மின்னணு சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கப்படும். அதன் செயல்பாடுகளையும் நேரடி செயல் விளக்கமாக கற்க முடியும்.
30 நபா்களுக்கு மட்டுமே முன்னுரிமை. பங்கேற்க விரும்புவோா் டிடிட்சியா அலுவலகத்தை 0431-2440114,2440119, 96595- 58111 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என அதன் செயலா் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.