வியாபாரிகள், உழவர் சந்தைகள் பாதிப்பு:
நகர்ப்புறத்தில் செயல்படும் தனியார் சந்தைகளை தடை செய்ய வேண்டும்
வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் கே.என்.நேரு கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
வணிகர்களாகிய நாங்கள் மத்திய அரசுக்கும் அரசுக்கும்
ஜி.எஸ்.டி. மற்றும் தொழில் வரி, மேலும் கடை லைசென்ஸ் ,குப்பை வரி போன்ற
பல்வேறு வரிகளை கட்டி வருகின்றோம்.
அதோடு கார்ப்பரேட்
கம்பெனிகளின் ஆதிக்கமோ நாளுக்கு நாள் பெருகிவரும் சூழ்நிலையில் உயிர்
வாழ்வதற்காக மட்டுமே வணிகம் செய்யும் கட்டாயத்தில் நாங்கள் இருந்து வருகின்றோம்
,

இத்தனை சுமைகளையும் சுமக்கும் சிறு வணிகர்களாகிய
எங்களை மேலும் நசுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் தனியார்
சந்தைகள் நகர்ப்புறத்தில் அதிக
வருமானத்திற்காக
நடத்தப்படுகின்றன.
இதனால்
சிறு வணிகர்கள் பாதிப்படைவதால்
அரசாங்கத்தால் நடத்தப்படும் உழவர் சந்தைகளும் பெரிய பாதிப்பிற்கு
உள்ளாகின்றன. எனவே நகர்ப்புறத்தில் நடத்தப்படும் இந்த தனியார் சந்தைகளை
உடனடியாக தடை செய்வதோடு முறையான வரி செலுத்தி வணிகம் செய்யும்
எங்கள் தொழிலும் அரசு உழவர் சந்தைகளும் வளர உதவிட வேண்டுகிறோம்.
எவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

