திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்…
ஒரு வருடத்தில் 2 வது முறை முதலமைச்சர் திருச்சிக்கு வந்திருக்கிறார். அவர் வரவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம், கலைஞர் 60 மாதத்தில் 50 முறை அடிக்கடி வந்திருக்கிறார்.
மேலும் 5மணி நேரம் மேடையில் நின்று கொண்டே மகளீர் சுய உதவி குழுக்களுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளில் முதலமைச்சர் திருச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் புதிய பேருந்து அமைய ரூபாய் 850 கோடி ஒதுக்கீடு செய்து அதில் முதல் கட்டமாக ரூ350 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி செய்து கொடுத்துள்ளார். அறநிலையத்துறையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். திருச்சியில் சிந்தாமணியில் இருந்து ஜங்ஷன் வரை பாலம் அமைக்கவும், குடமுருட்டியிலிருந்து பாலம் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
மேலும் மணப்பாறை, துறையூர், முசிறி, போன்ற பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை வழங்கியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் திருச்சி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வாரி
வழங்கி உள்ளார்.
எப்பொழுதுமே திருச்சி மக்கள் உங்கள் பக்கம் தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திருச்சி மக்கள் எப்பொழுதும் உங்களை ஆதரிப்பார்கள் இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.