Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பதையே விரும்புகிறேன் திருச்சியில் அமைச்சர் உதயாநிதி பேச்சு

0

'- Advertisement -

 

 

உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பதையே விரும்புகிறேன் திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:

திருச்சிக்கு நான் பலமுறை வந்துள்ளேன்.
இன்றைக்கு நான் அமைச்சராக முதன் முறையாக வருகிறேன். நீங்கள்
வரவேற்று அளித்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த1989ஆம் ஆண்டு தர்மபுரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சுயஉதவி குழுவை தொடங்கி வைத்தார், தொடர்ந்து அதனை
1996ஆம் ஆண்டு மகளிர் சுயஉதவி குழு இயக்கமாக மாற்றி தமிழகத்தில் உள்ள மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்தார்.
இத்திட்டத்தை 4 லட்சம் கிராம, நகர புறா பகுதிகளுக்கும் கொண்டு சென்றனர்.
2020- 21ஆம் ஆண்டில், 16,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி உள்ளோம்.

திராவிட மாடல் ஆட்சியில் சுயஉதவி குழு முதன்மை பெற்று வருகிறது.
இதன் பெருமை இங்கு வந்துள்ள தாய்மார்களை சேரும்.
பிற மாநிலத்திலும் இத்திட்டம் சென்றடைந்துள்ளது.

2021ஆம் ஆண்டு 16 லட்சம் சுயஉதவிக்குழுவுக்கு
2800 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சுயசார்பு பெற்று பெண்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் சுயஉதவிக்குழு செயல்படுகிறது.

தமிழக முதல்வராக பதவியேற்றவுடன்
நகரப் பேருந்தில் பெண்கள் இலவச பயணம் என அறிவித்தார் இந்த அறிவிப்பை தொடர்ந்து
இதுவரை 100 கோடி பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து
புதுமை பெண்
திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். இந்த திட்டம்
புதிய புரட்சி திட்டத்தை ஏற்படுத்தியது.
2021-22ஆம் ஆண்டில் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4லட்சம் பேர் பயனாளிகளாக உள்ளனர்.

தற்போது சுயஉதவிக்குழுவிற்கு25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து 2023 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில்
அனைத்து சுய உதவிக் குழுவினர் பல்வேறு பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த நிகழ்வில்
42,081சுயஉதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு
2,548 கோடி நிதியுதவி,
33 சமுதாயம் சார்ந்த பெண்களுக்கு
மணிமேகலை விருது,
சிறந்த முறையில் செயலாற்றும்
8வங்கியாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த மகளிர்
சுயஉதவிக் குழுவின் திட்டத்தில் பயனடையாதவர்கள் இல்லை எனலாம்.

திருச்சிக்கு
முதல்வரின் மகனாக,
கலைஞரின் பேரனாக
அமைச்சராக வந்தாலும்.
என்றும் உங்களை விட்டு செல்ல பிள்ளையாக இருப்பதையே விரும்புகிறேன். இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.