உதயநிதிக்கு துணை முதல்வருக்கு இணையான துறை பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்…
முதல்வரை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
திராவிட மாடல் ஆட்சி
ஒரு ஆண்டு முடிந்து உள்ளத்தை மனநிறைவுடன் நினைவு கூறுகிறேன்.
தென்காசி மாவட்டத்தில் ஆராதனா என்ற மாணவி அவர் படிக்கும் பள்ளியை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் அங்கு சென்றபோது கூறினார்.அவரது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து இன்று அங்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது அந்த மாணவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் நான் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார் என
அவருக்கு நன்றி தெரிவித்து அந்த மாணவி கடிதம் எழுதியுள்ளார்.
எங்களுக்கு இன்று தான் ஆங்கில புத்தாண்டு
எனவே பரிசுகளை பெற வந்திருக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வருக்கு இணையான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்று நான் அனைவரையும் நம்புகிறோம். அவர் பணி சிறக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசினார்