திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் சங்க கூட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் தொழிலாளர் பிரிவான மனித தொழிலாளர்கள் சங்கத்தின்
திருச்சி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா
தலைமையில் நடைபெற்றது.
ம.ம.க மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி,த.மு.மு.க மாவட்ட செயலாளர் இலியாஸ்,
தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சபியுல்லா , மாவட்ட பொருளாளர் அப்துல் ஜாவித் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சங்கம் சார்ந்த தொழிலாளர்களை தொழிலாளர் நல வாரியத்தில் இணைப்பது ,
திருச்சி என் எஸ் பி ரோட்டில் ஜவுளி மற்றும் நகைக்கடை வாகனங்களை மட்டும் அனுமதித்து அன்றாட தொழில் செய்யும் ஆட்டோக்களை அனுமதிக்காமல் வஞ்சிக்கும் காவல்துறையை கண்டிப்பது,
ஆட்டோ ஓட்டுநர்கள் சரியான ஆவணங்களை வைத்திருந்தாலும் அவர்கள் மீது பொய் வழக்குகளையும் ஆன்லைன் அபராதம் போடும் காவல் அதிகாரிகளை கண்டிப்பதோடு நேரில் தகவல் தெரிவிப்பது,
தொடர்ந்து நிறுத்தாவிட்டால் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மனிதநேய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.