திருச்சி வரும் முதல்வருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க
வருகை தரும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை திருச்சிக்கு வருகிறார். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக, திருச்சி தெற்கு மாவட்ட எல்லைகளான விமான நிலையம் வாசல்,
டி-மார்ட், கோளரங்கம் வாசல்,
ஆவின் வாசல், மத்திய சிறைச்சாலை முன்புறம், சுப்பிரமணியபுரம் எம்ஜிஆர் சிலை அருகில்,
டி.வி.எஸ்.டோல்கேட் ராதா ஹோட்டல் அருகில்,
அண்ணா விளையாட்டரங்கம்
ஆகிய
இடங்களில் மிகப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
நாளை( 29 -ந் தேதி) ஆங்காங்கே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை, கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டலம், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பீர்கள் என கேட்டு கொள்கின்றேன்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.