சமயபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.
சிறுகனூர் அருகே பெருவளப்பூரை சேர்ந்த சீனிவாசன் அவருடைய மகன் மதிவாணன் வயது(வயது 38) என்பவரிடம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தத்தனூர் பகுதியை சேர்ந்த இன்பம் அவருடைய மகன் சரத்குமார் (வயது 24) செம்மறி ஆட்டை மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மதிவாணனுக்கு சொந்தமான வயல்காட்டில் சரத் குமார் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு கையில் வைத்திருந்த கட்டுக் கம்பியை அருகே உள்ள மின் மோட்டார் பாக்ஸில் வைத்தபோது மின்சாரம் தாக்கியது, இதில் படுகாயம் அடைந்த வரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டார் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.