திருச்சியில் ஜே.கே.சி. அறக்கட்டளையின் சார்பில் 33ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா.
ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பில் 33 வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,மத நல்லிணக்க நாயகர் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட ஓய்வு பெற்ற அமர்வு நீதிபதி ஆர். ரவீந்திரன், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன், அரிமா சங்க நிர்வாகி டாக்டர் டி.ஜி.ஆர். வசந்தகுமார், பேராயர்கள் எம்.எஸ். மார்ட்டின், ரவி சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் மாநில சட்ட ஆலோசகர் வக்கீல் சி.பி. ரமேஷ், கௌரவத் தலைவர் பேராசிரியர் பி. ரவி சேகர், ஆடிட்டர் எம். ரிச்சர்ட் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். பேராசிரியர் சி.அருள் வரவேற்றுப் பேசினார். உலக தமிழ் திருக்குறள் பேரவையின் அமைச்சர் எம். சந்திரசேகர்,மூத்த வக்கீல் கே. செல்வராசு, முன்னாள் தாசில்தார் கே. எஸ். அப்துல் அஜீஸ், ஆசிரியர் அலெக்சாண்டர், ஜோசப் கண் மருத்துவமனை தேவாலய ஆயர் எஸ். டேவிட் பரமானந்தம், என்ஜினியர் சாம்புகவேல், ராஜலிங்கம், ஸ்டீல் என். எம்.சலாவுதீன், திருவரங்கம் தமிழ் சங்கத் தலைவர் ஆயர் பால் ஜெயக்குமார், ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் சையத் ஜாஹிர் அசன், தலைமையாசிரியர் ஜான் பிரிட்டோ, ஆடிட்டர் வீரமணி,இந்திய நாடார் பேரவை தலைவர் ஜெ.டி. ஆர்.சுரேஷ், எஸ். சந்தானகிருஷ்ணன், எம். சகுந்தலா,
ஐ ஆனந்தராஜ், டாக்டர்கள் ஆர் குமார், மதி குமார், எம்.அப்துல் சலாம்,பேராயர் ஜான் ஜேம்ஸ், ஆசிரியர் எம். அலெக்சாண்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கே. பாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் முடிவில் ஜே.கே.சி. அறக்கட்டளை நிர்வாகி ஜெ. மனோகரி நன்றி கூறினார்.
இதில் அந்த நல்லூர் வட்டார கல்வி அதிகாரி மருதநாயகம் உன் கூட ஏராளமான பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.