திருச்சி தில்லை நகரில் ரூ.59 முதல் ரெடிமேட் ஆடைகள் உலகம் M Tennz ரெடிமேட் ஷோரூம் திறப்பு.
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பிரத்தியோகமாக தஞ்சையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது M Teenz என்ற ரெடிமேட் ஷோரூம்.
தொடர்ந்து காரைக்குடி ,தஞ்சையில் இரண்டாவது கிளை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை இதைத்தொடர்ந்து தற்போது திருச்சி தலைநகரில் தனது ஆறாவது கிளையினை தொடங்கியுள்ளது.
மலைக்கோட்டையில் ஒரு பட்ஜெட் கோட்டை என்ற தலைப்பில் ரூபாய் 59 முதல் 599 வரை விலை நிர்ணயம் செய்து ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். புதிய ஷோரூமினை மகாராஜா/ சீமாட்டி குழுமத் தலைவர் ஹாஜி எம். எஸ் .முகமது ரஃபி திறந்து வைத்தார். திருச்சி மாநகர மேயர் அன்பழகன் ,திமுக மேற்கு மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த ரெடிமேட் ஷோரூமின் சிறப்பு அம்சங்கள் குறித்து அதன் உரிமையாளர் கூறும் பொழுது இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக M Teenz செயல்படும். ரூபாய் 59 முதல் 599 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்துள்ளோம் .
பாய்ஸ் டீசர்ட், கேர்ள்ஸ் லெக்கின்ஸ் ,
ஜென்ஸ் டீ சர்ட் முதலியவை ரூ 59 விலைகளில் கிடைக்கும் .
மேலும் இளம் பெண்களுக்கான டாப்ஸ் , டி ஷர்ட்,ஜீன்ஸ் பெண்களுக்கான வெஸ்டர்ன் டாப்ஸ், பட்டியாலா மற்றும் சிறுவர்கள் மற்றும் ஆண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் விற்பனை செய்கிறோம் .இங்கு தரைத்தளத்தில் பார்க்கிங் வசதியும் உள்ளதுஆறு கிளைகள் கொண்ட எங்களது நிறுவனத்தில் மூன்று லட்சம் நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளோம். சுமார் 4.5 லட்சம் வகையான ஆடைகள் விற்பனைக்கு வைத்துள்ளோம் விரைவில் தமிழகமெங்கும் கிளைகள் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
தொடக்க நாளான அன்றே ஏராளமான இளைஞர்களும், பெண்களும் தங்களுக்கு பிடித்த தரமான உடைகளை குறைந்த விலையில் தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கி செல்லும் போது திருச்சியில் இதுபோன்று மலிவான விலையில் தரமான, வித விதமான ஆடைகளை நாங்கள் வேற எந்த கடையிலும் கண்டதே இல்லை என கூறி சென்றனர்.