திருச்சி பொன்மலைபட்டியில் பைனான்ஸ் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை .
பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் ( வயது 37) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பைனான்சில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரவீன் ராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால் வேலைக்கு சரியாக செல்லாமல் நின்று விட்டார்.இதனால் மனைவி சகாய ஏஞ்சலிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனைவி சகாய ஏஞ்சல் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார் .
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த லூயிஸ் பிரவீன் ராஜ் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லூயிஸ் பிரவீன் ராஜீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.