மின் கட்டணம்,சொத்துவரி, பால் விலை உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும்.திருச்சி மாநகர் தமாகா கூட்டத்தில் தீர்மானம்.
மக்களை கடுமையாக பாதிக்கும்:
மின்கட்டணம், சொத்து வரி,பால்விலை உயர்வை அரசு கைவிட வேண்டும்.
திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் இன்டர்நெட்
என்.ரவி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாநில செயலாளர் ஸ்ரீரங்கம்
மதிவாணன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் ரவீந்திரன், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் திருச்சி
குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜூ வரவேற்று பேசினார்.
கூட்டத்தின் முடிவில் இளைஞரணி மாநகர் மாவட்ட தலைவர் தனசேகர் நன்றி கூறினார். கூட்டத்தில்
தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. பிறந்த நாளினை, பல்வேறு வழிபாட்டு தலங்களில் தலைவர் பெயரில் சிறப்பு பிரார்த்தனை செய்தும், அன்னதானம் வழங்கியும், பல்வேறு பகுதிகளில் கொடி ஏற்றுவது,, முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களில் உணவு வழங்குவது .
இந்திய எல்லையான அருணாச்சலப் பிரதேசத்தில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை விரட்டி அடித்த இந்திய வீரர்களை பாராட்டுவது,
மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு, நெய் விலை உயர்வு, வெண்ணெய் விலை உயர்வு என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிடுட்டுள்ளதமிழக அரசு உடனடியாக இந்த விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் . தமிழக அரசு அனைத்து துறைகளிலும் இலவச மானியங்களுக்கான நடைமுறையினை எளிமைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் புதிதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ,
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தின் அண்ணா உள் விளையாட்டரங்கத்தினை உலக தரத்திற்கு உயர்த்தி தமிழகத்தில் இருந்து பல்வேறு உலகளாவிய விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் .
இ-சேவை மையம், ஆட்சியர் மற்றும் அரசு துறைகளில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுமதிவழங்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் நிராகரித்தால் அதற்க்கான காரணங்களை தெரியப்படுத்தாத சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் அபராதம் விதிக்கும் வகையில் சேவை உரிமை சட்டம் இயற்ற வேண்டுமென தமிழக அரசை, இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.விவசாயிகள் நேரடியாக லாபம் ஈட்டும் வகையில், விவசாய உற்பத்தி பொருட்களின் இருப்பிடம், இருப்பு, விலை விபரத்தினை விவசாயிகளே பதிவு செய்து கொள்கின்ற வகையிலும், சில்லரை வணிகர்கள்,ஓட்டல் போன்ற உணவு தயாரிப்பாளர்கள், அடையாளம் கண்டு பயன் படுத்திக்கொள்கின்ற வகையில், உழவன் போன்ற விவசாய செயலிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்கள் வரகனேரி சரவணன், தாராநல்லூர் ரவிச்சந்திரன்,, சிவசக்தி வெங்கடேசன், அண்ணாநகர் நடராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபு, இளைஞரணி மாநில செயலாளர் சிவகணேசன், கோட்டத் தலைவர் கண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குட்டிமணி, செந்தண்ணீர்புரம் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி அன்னபூரணி , மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி ஈஸ்வரி, மருத்துவர் அணி மாநகர் மாவட்ட துணை தலைவர் லட்சுமி நந்தகுமார், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் உசேன், சௌக் அனீஸ், மீனவர் பிரிவு மாவட்ட தலைவர் குரு மணிகண்டன், சின்ன கடை வீதி மோகன்ராஜ், காஜா பேட்டை ஜடேஜா, கே கே நகர் கார்த்திக் , எடத்தெரு முருகேசன், மரக்கடை காசிம், உய்யக்கொண்டான் திருமலை மனோகர், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் கமல் , இளைஞர் அணி மாவட்ட பொது செயலாளர் மாலிக், கோகுலகிருஷ்ணன், சிந்தாமணி பாண்டியராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சதீஷ், எடமலைப்பட்டி புதூர் லெட்சுமிபதி, திருச்சி தெற்கு மாவட்ட அந்தநல்லூர் வட்டாரத் தலைவர் மல்லியம்பத்து பன்னீர்செல்வம், தெற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் ரகுராமன், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ராம் சுந்தர் பொதுச் செயலாளர் குணசேகரன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.