Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் இலவச மருத்துவ முகாம்..

0

திருச்சி அரியமங்கலத்தில்
இலவச மருத்துவ முகாம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ஆரோமா மருத்துவமனை மற்றும் காப்பகம், அண்ணல் மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் திருச்சி அரியமங்கலம் திருவள்ளுவர் நகரில் அண்ணல் மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் அண்ணல் மகாத்மா காந்தி நினைவு சேவை அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி ஆறுமுகம் தலைமையில் நடந்தது.
மத்திய அரசின் கள விளம்பரத்துறை அதிகாரி தேவி பத்மநாதன் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்யாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம், மத்திய அரசின் நேரு யுவகேந்திரா இயக்குனர் சுப்பிரமணியன், கனரா வங்கி முன்னாள் சீனியர் மேலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் தர்மராஜ், செயற்குழு உறுப்பினர் தங்கவேல், மாநில ஆலோசகர் ராஜசேகர், ஜோசப் ஜோய் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், பல் மருத்துவம், கண் நோய் ஆகியவற்றிற்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் முடிவில் தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்யாகிரக விழிப்புணர்வு இயக்க உறுப்பினர் தமிழ்மணி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.