திருவானைக்காவல் காவேரி கேரேஜ் நிறுவனத்தில்
ஒரே நாளில் 17 மின்சார கார்கள் விற்பனை.
தமிழகத்தில் டாடா மோட்டார்ஸின் பயணிகளுக்கான வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாக காவேரி கேரேஜ் பிரைவேட் லிமிடெட் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் கிளைகள் திருச்சி, மதுரை, திண்டுக்கல், பழனி, பெரம்பலூர், அரியலூர், உத்தமபாளையம், விருதுநகர், பரமகுடி ஆகிய
இடங்களில் உள்ளன.
இந்த நிலையில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் திருவானைக்காவல் பகுதியில் உள்ள காவேரி கேரேஜ் நிறுவனத்தில்
வாடிக்கையாளர்களுக்கு ஒரேநாளில் 17 டிகோர் இ.வி. மின்சார கார்கள் விற்பனை செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை (17.12.2022) நடைபெற்றது.
நிகழ்ச் சியில் தலைமை நிர்வாக அதிகாரி சிபி கலந்து கொண்டு,
வாடிக்கையாளர்களுக்கு கார்களின் சாவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் அசோகன், மனிதவள மேலாளர் வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காவேரி டாடா மோட்டார்சில் வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத மின்சார கார்கள் பல்வேறு சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.