Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் ஆலங்கன்று நடும் விழாவை துணைவேந்தர் துவக்கி வைத்தார்

0

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் ஆலங்கன்று விருச்சகம் நடும் விழாவை துணைவேந்தர் துவக்கி வைத்தார் .

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிகாட்டுதல்படி யூத் ரெட் கிராஸ் மண்டலம் சார்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் ஆலங்கன்று விருச்சகம் நடும் விழா இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன்,பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

ஆலமரம் ஆனது புராணங்களில் ஒரு புனித மரமாகவே கருதப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஆலமரத்திற்கு கீழ் பல கோயில்கள் இருப்பதை காண்கிறோம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் உள்ளன. ஆலங்கன்று விருச்சகம் நடுவதன் மூலம் பிற்காலத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அதன் மூலம் பயனடைய கூடும் என்பதை கருத்தில் கொண்டு துணைவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை பசுமை சோலையாக மாற்று வண்ணம் இந்த நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்த கல்வி ஆண்டில் மட்டும் இதுவரை 5000க்கும் மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகள் அதாவது சந்தன மரக்கன்றுகள், செம்மரக்கன்றுகள் மற்றும் பல வகையான மூலிகை கன்றுகள் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பல அபூர்வகையான மூலிகை மரங்கள் உள்ளன. அதாவது வெண் நாவல் விருச்சகம் வருடத்திற்கு இரண்டு முறை கனிகள் காய்கின்றது. கருநாவல் மரம் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் மிகுந்து காணப்படுகிறது. மிக அபூர்வ மூலிகையான கிருஷ்ணா கம்பளம் கொடியானது பாரதிதாசன் பல்கலைக்கழக நூலக துறையில் நடப்பட்டு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். ஆப்பிள் மர கன்றுகளும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் பல இடங்களில் நடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.