புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூ1.65 கோடி செலவில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
புங்கனூர் முதல் அல்லித்துறை வரை
ரூ.1.65 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி
அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், புங்கனூர் கிராம ஊராட்சியில் புங்கனூர் முதல் அல்லித்துறை வரை ரூபாய் 1.65 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதாரணி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா,
மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர் மாத்தூர் கருப்பையா, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.