மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
திருச்சி மாநகர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் ஏர்ஹார்ன் பயன்படுத்தும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை.
பாம்பு- கீரி சண்டையை இந்த தலைமுறை பார்த்ததில்லை. ஆனால் அந்த குறையை போக்கும் விதமாக திருச்சி மாநகரில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு முந்தி செல்லும் அட்ராசிட்டியை கண்டு திருச்சி சிட்டியே நடுங்கி வரும் வேலையில்_மேற்படி தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சட்டவிரோத ஏர்ஹாரன்களால் சாலையில் நிம்மதியாக பயணிக்கமுடியவில்லை என வேதனை தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.
திருச்சி மாநகர காவல்துறை அவ்வபொழுது தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமாக பயன்படுத்தபடும் ஏர்ஹாரன்களை பரிமுதல் செய்வதோடு_அபராதம் விதித்தும் வருகிறார்கள். ஆனாலும் இந்த சட்டவிரோத செயல் தொடர்ந்து வருவதற்கான காரணம் அபராதம் விதிப்பதோடு இந்த நடவடிக்கை நின்றுவிடுவது தான்.
எனவே திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருச்சி மாநகர வழிதடத்தில் சட்டவிரோத ஏர்ஹாரன்களை பயன்படுத்தும் தனியார் பேருந்துகள் மீது அபராதம் விதிப்பது மட்டுமல்லாது பேருந்துகளை பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என வழக்கறிஞர் கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.