திமுக அரசை கண்டித்து தெற்கு மாவட்ட ஒன்றியங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் பட்டை நாமம், அரிகேன் விளக்குடன் ஆர்ப்பாட்டம்.
விடியா திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் ஆற்றிய கண்டன பேரூரையில் விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது,
பால்விலை, சொத்து வரி, மின் கட்டணம் அனைத்தும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவோம், இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் தருவோம்,ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து,படிப்படியாக டாஸ்மாக் மூடப்படும் என பல பொய்யான வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு தந்து ஆட்சியை பிடித்து தற்போது பொது மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர்.
இதை போல் மறைந்த முதல்வர் அம்மா கொண்டு வந்த ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வந்த பல்வேறு நலத்திட்டங்களை உதாரணமாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம்,ஏழைப் பெண்களுக்கு கால்நடைகள்,மாணவன் மாணவிகளுக்கு லேப்டாப்,
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்,
பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பாதி விலையில் இருசக்கர வாகனம் இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம் வெற்றி அனைத்தையும் தற்போதைய திமுக அரசு தடை விதித்து விட்டனர்.
திமுகவில் குடும்ப அரசியல் கிடையாது எனக் கூறிய ஸ்டாலின் எனது மகனை அரசியலுக்கு கொண்டு வர மாட்டேன் என கூறியவர் இளைஞர் அணி பதவி கொடுத்து பின்னர் எம்எல்ஏ ஆக்கி இன்று அமைச்சராகவும் ஆக்கிவிட்டனர்.
இன்று திமுக ஆட்சியால் மக்கள் படும் இன்னல்களை நினைவில் கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என தனது கண்டன பேருரையில்
ப.குமார் பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தொண்டர்கள் பட்டை நாமம் அடித்துக் கொண்டு கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறையை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்ட செயலாளர்
ப.குமார் மருங்காபுரி ஒன்றியம் வளநாடு கைகாட்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கண்டன உரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர்,
ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.