திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத.சொத்துவாரி பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு என பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஆட்சி செய்து விடிய திமுக அரசை கண்டித்து மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன பேருரையில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் சிந்தாமணி கூட்டுறவு தலைவர் சகாதேவ பாண்டியன் அம்மாவின் ஆட்சியில் வந்த மக்கள் பல மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது.பால் விலை கடுமையாக ஏற்றப்பட்டுள்ளது.அடிப்படை பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது எனக் கூறினார்.
இதற்கு பாராளுமன்ற தேர்தலிலேயே மக்கள் திமுகவுக்கு பாடம் புகுத்துவார்கள்.மீண்டும் பொதுமக்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை எதிர்த்து தொடங்கி விட்டார்கள் எனவே வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவதை யாராலும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனக் கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் அரவிந்தன், டாஸ்மாக் பிளாட்டோ மற்றும் 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.