Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி தேர்தலின் போது கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.

0

 

 

திருச்சியில் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

குல வேளாளர்கள் பேரமைப்பு
ஆலோசனை கூட்டம்
அதன் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் கோ.சங்கர் முன்னிலையில் தில்லை நகரில் நடந்தது.

கூட்டத்துக்கு தலைவர ம.அய்யப்பன்
தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-
தேவேந்திர குல வேளாளர் இன மக்களை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என
மத்திய மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட வேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியை தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு
ஆதரித்தது. அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு அன்பில் மகேஷ்
பொய்யாமொழி ஆகிய இருவரும் திருச்சி மாநகரில் தியாகி இம்மானுவேல் சேகரனார், சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர் திருஉருவ சிலைகள்
அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதிகளை விரைந்து
நிறைவேற்ற வேண்டும்.

திருச்சி மாநகரில் தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் எழுதப்பட்ட சுவர்
விளம்பரங்களை கருப்பு மை அடித்து களங்கப்படுத்திய கயவர்களை இக்கூட்டம் வன்மையாக
கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் வேலை செய்ய, தொழில் செய்ய வருகின்ற அந்திய மாநிலத்தவர்களுக்கு
வாக்குரிமை, ரேசன் கார்டு உரிமை, நிலம் வாங்கும் உரிமை எதுவும் வழங்க கூடாது என
தமிழக அரசை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
நடத்த வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ம. பாவேந்தர்,
இ.இளையராஜா,
ஜே.ஜான்மாணக்கம்,
பிரதாப்,விஜயராஜ்,
தி. சுந்தரம்,
அம்பேதகர்,
பாலா
முருகானந்தம்,
ஆகிய மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.