திருச்சியில் அதிரடி சோதனையில்
கஞ்சா,லாட்டரி விற்ற 17 பேர் சிக்கினர்.
திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி புழக்கம் அதிகம் இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி அரியமங்கலம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர்,உறையூர் பகுதிகளில் அந்தந்த சரக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் துண்டு சீட்டில் எழுதி விற்றதாக அரியமங்கலத்தைச் சேர்ந்த ஹஜ்புதீன், பாத்திமா பீவி, மனோகர், தர்மராஜ், தியாக சுந்தரம், பாபு, ராபர்ட் அர்னால்ட், சண்முகம்,ஜாபர் அலி கான், முகமது அலி ஜின்னா ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் கஞ்சா விற்பதாக எடமலைப்பட்டி புதூர், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த டாக்கர், ஜெயசீலன், சிந்தாமணி பாபு, இ.பி.ரோடு பாக்யராஜ், சிந்தாமணி செபஸ்டின், செல்வம், பாலக்கரை யேசு, முத்துக்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.