திருச்சி புத்தூர் ஒய்எம்சிஏ சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வருடா தோறும் இலவச மருத்துவ முகாம் நடைபெறும்.
அதேபோல் இந்த வருடமும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி ஒய் எம் சி ஏ , டாக்டர் மோகன் நீரழிவு சிறப்பு மையம்,வாசன் கண் மருத்துவமனை,
ராயல் பேர்ல் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் இன்று புத்தூர் ஈ.வே.ரா ரோட்டில் உள்ள (அரசு மருத்துவமனை எதிரில்)
ஒய் எம் சி ஏ வளாகத்தில் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமினை ஒய்எம்சிஏ தலைவர் எரானஸ்ட் ரவி ,பொதுச் செயலாளர் பர்னபாஸ்,துணை தலைவர்கள் நோபல் ரிச்சர்ட், ரவிச்சந்திரன்,
பொருளாளர் ஜான்நிக்கல்டோஸ்,நிர்வாக குழு உறுப்பினர் ராஜா ஆகிபோர் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்.
இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.