திருச்சி ஜில்லா நாயுடு சங்கம் சார்பில் மாவட்ட அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியை முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி தொடங்கி வைத்தார்.
ஜில்லா நாயுடு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ்
போட்டி.
முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
திருச்சி ஜில்லா மாவட்ட நாயுடு சங்கமும், திருச்சி மாவட்ட
டேபிள் டென்னிஸ் முன்னேற்ற சங்கமும் இணைந்து நடத்தும் மாவட்ட
அளவு டேபிள் டென்னிஸ் போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டி நாளையும் நடக்கிறது .நாயுடு
சங்க வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிகள் மினி கேடட், கேடட்,
ஜூனியர்
சப் ஜூனியர் ,
முதியோர், இளைஞர், ஆடவர், மகளிர் என பல்வேறு
பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
போட்டியை இன்று (10-ந்தேதி) காலை 9 மணிக்கு திருச்சி
கிழக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி
தொடங்கி வைத்தார்.
இந்த தொடக்க விழாவில் நாயுடு சங்கத் தலைவர் விஜயகுமார் நாயுடு, செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் பிரபுராம், நடுவர்கள் சுகுமாரன், பிரியதர்ஷினி மற்றும் திருச்சி மாவட்டத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டி நாளையும் நடக்கிறது. நாளை (11 ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறும்
இறுதிப்போட்டிக்கு .ரெட்பாக்ஸ் ஹோட்டல் உரிமையாளர் பாரி
தலைமை தாங்கி பரிசுகளை வழங்குகிறார்.
போட்டி ஏற்பாடுகளை
நாயுடு சங்க தலைவர் பி. விஜயகுமார். நாயுடு, டேபிள் டென்னிஸ்
அமைப்பு தலைவர் மேஜர் பொன்னுரத்தினம் மற்றும் நிர்வாக
உறுப்பினர்களும் செய்து உள்ளனர்.