துவரங்குறிச்சி அருகே
போலீஸ் வாகன சோதனையில் ஒன்றே கால் கிலோ கஞ்சா,
மோட்டார் சைக்கிள் உடன் சிக்கியது.
திருச்சி துவரங்குறிச்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகாமையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீசை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு புதருக்குள் ஓடி மறைந்தார்.
அதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றி சோதனைக்கு உள்ளாக்கிய போது பெட்ரோல் டேங்க் கவரில் ஒன்றே கால் கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் ஆகும்.
பின்னர் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் கடத்தி வந்த நபர் மணப்பாறை மருங்காபுரி காமன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அப்துல் வாஹித் (வயது 20) என்பது தெரிய வந்தது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
கஞ்சா கடத்தி வந்த நபர் போலீசை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.