வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி: கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு
1 லட்சத்து 8 வடமாலை சாத்துதல் நிகழ்ச்சி.
திருச்சி கல்லுக்குழியில் அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 23ம் தேதி நடைபெறும் அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு 10 வது ஆண்டாக 1 லட்சத்து 8 வடமாலை சாற்றுதல் விழா மற்றும் 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த விழாவை ஒட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. அதன் பின் வடமாலை மற்றும் ஜாங்கிரி மாலைகள் சாத்துதல் விழா காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இந்த வடமாலை மற்றும் ஜாங்கிரி மாலை சாத்துதல் விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இங்கு வட மாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரூ. 75 முதல் ரூ. 30 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஜாங்கிரி மாலைக்கு ரூ. 375 லிருந்து ரூ. 15,000 வரை அதன் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயத்துள்ளனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுதாகர், தக்கார் சுந்தரி, கோவில் அர்ச்சகர் வரதராஜன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.