சிறுமியை காதலிப்பதாக ஆசை வர்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த
திருச்சி சிறையில் அடைப்பு.
நன்னடத்தை உறுதிமொழியை மீறி குற்றச்செயல்களில்
ஈடுபட்டதால் நீதிமன்றம் நடவடிக்கை.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் ஏதும்
நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதிகளில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து கழுத்தில்
அணிந்திருந்த தாலி செயினை கொள்ளையடித்த திருச்சியை சேர்ந்த
ரத்தினவேல் (வயது 20) என்ற ரவுடி தொடர்ந்து
குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய
ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி ரத்தினவேலை நிர்வாக செயல்துறை
நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட
காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல், குற்றச்செயல்களில்
ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை ரத்தினவேல் தாக்கல் செய்துள்ளார்.
பின்பு, ரத்தினவேல் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி
சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக
வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு
ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து
நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில்
இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 317 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக
செயல்துறை நடுவர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,
ரத்தினவேல் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற கத்தியை காண்பித்து பணம், நகை
கொள்யைடுக்கும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி காவல்
மாநகர ஆணையர் கார்த்திகேயன்
தெரிவித்துள்ளார்.