திருச்சியில்
முதியவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது.
திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது66). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பெரியசாமி திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்கரை காஜா பேட்டையை சேர்ந்த கார்த்திக்கு என்கிற கட்டையன்(வயது28),ஆரிப்கான் (வயது19), நியமத்துல்லாஹ் (வயது14) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் காஜாபேட்டை பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் (வயது32) என்பவர் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.