குழந்தைகள் இறந்த மனவிரக்தியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி லால்குடி புள்ளம்பாடி கரையான் பட்டி ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 48). தொழிலாளி.
இவரது மனைவி கலையரசி
(வயது 44).
இந்த தம்பதியருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.
இந்த 2 குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் இறந்த தூக்கம் தாங்காமல் மனவிரக்தியில் காமராஜ் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். மனைவி அவருக்கு எவ்வளவு அறுதல் கூறியும் காமராஜரிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய காமராஜ் பூராம்பட்டி ஏரி பகுதியில் உள்ள ஒரு மாமரத்தில் நைலான் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த கலையரசி கள்ளக்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காமராஜ் உடலை மீட்டு இலால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்