திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை.
வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகிய பிரச்சனைகளில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், ஆமூர் ஜெயராமன், ஆதாளி, ராஜமாணிக்கம், ஜெயக்குமார் பால்மணி, பிரகாசவேல், ஜெயம், குமரவேல், சேனை செல்வம், அழகாபுரி செல்வராஜ், வெங்கடேசன் மற்றும் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி வருகிற 9, 13 ,14 ஆகிய தேதிகளில் திமுக அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கட்சியினர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.