அம்பேத்கரின் 66 வது நினைவு நாள்.அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
அம்பேத்கரின் 66 வது நினைவு நாளை முன்னிட்டு.திருச்சிஅரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, ஜங்ஷன் பகுதி செயலாளர் ஏ.பி.சேகர்,மாநகர் இளைஞர் அணி சந்துரு, உறையூர் பிரதிநிதி தென்னூர் பிரேம்.கணேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.