Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பரஞ்ஜோதி தலைமையில் அஞ்சலி செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

0

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று

அதிமுக பொதுச்செயலாளரும்,, முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலுக்கிணங்க,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்தில் சோமரசம்பேட்டை, குழுமணி, ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய இடங்களில்

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

.

நிகழ்ச்சியில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜன், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட மீனவரணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், எட்டரை அன்பரசு, வழக்கறிஞர் தேவா உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.