பால்வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பால்வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் இன்று நடைபெற்றது.
மாநில தலைவர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார்.. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுச் செயலாளர் தண்டபாணி, மாநில துணைத்தலைவர் அமிர்த குமார் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பால்வளத் துறையில் கடந்த ஆட்சிக்கால குளறுபடியால் இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள துணைப் பதிவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் ,
பால்வள துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் 54 கூட்டுறவு சார்பாக பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 52 கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.