திருச்சி மாநகராட்சி அருகே தனியார் மையத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.
மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் , மேற்பார்வையாளர்கள் போன்ற இதர பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடுவதை கைவிட வேண்டும்,
மாநகராட்சிகளில் நீண்ட காலமாக பணிபுரிபவர்களை உடனடியாக பணி நிரந்தர படுத்த வேண்டும்.
தனியாரிடம் கொடுத்து 69 சதவீத இடஒதுக்கீடு சமூக நீதியை பலியாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடந்தது.
இதேபோல் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட செயலாளர் சேதுபதி, முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் ஷாஜகான், சந்துரு, யுவராஜ், நிவேதா, ஏழுமலை அஜித்குமார், பிரபாகரன் உள்பட ஏராளமானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.