திருச்சியில்
கலப்பட உணவுகளை கண்டறியும்
நடமாடும் வாகனத்தை
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இன்றைய நவீன காலத்தில் கலப்படம் இல்லாத பொருட்களே இல்லை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் கலப்பட பொருட்களை
கண்டறியும் வகையில் நவீன நடமாடும் வாகனம் வாகனத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசிய போது:- இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இந்த வாகனம் திருச்சி மாவட்டத்தில் செயல்படும்.
டீ ,பால் பொருட்கள், இனிப்பு வகைகள், குளிர்பானங்களில் உள்ள கலப்படங்களை இந்த வாகனத்தில் உள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கணினிகள் உள்ள ஆய்வகம் மூலமாக கண்டறிய முடியும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சோதனைகளை பொதுமக்கள் நேரில் பார்வையிடலாம்.
இதன் மூலம் அவர்கள் கலப்படம் குறித்த விழிப்புணர்வை பெற முடியும் என்றார்.
இந்த வாகனமானது திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் வரும்
31 ஆம் தேதி வரை செயல்படும் எனக் கூறினார்.நிகழ்ச்சியின் போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.