திருச்சியில்
எஸ்.டி.டி.யு தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றி,
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் எஸ்.டி.டி.யு.தொழிற்சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் கிளை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சியில் நடந்த நிகழ்வில் கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் முஹம்மது ரபீக், எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட செயலாளர் காஜா மொய்னுதீன், மாவட்ட துணைத் தலைவர் மீரா மொய்தீன், மாவட்ட பொருளாளர் சக்கரை மீரான், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கிளை, தொகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ்,. சமூக ஊடக மண்டல தலைவர் ரியாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலீயாஸ் வரவேற்புரையாற்றினார்.
இறுதியாக பாண்டமங்கலம் கிளையின் செயலாளர் சாகுல் நன்றியுரையாற்றினார். திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பாண்டமங்கலம் கிளை, வெல்கம் மினி லாரி ஆட்டோ ஸ்டாண்ட், ஜங்ஷன் மேம்பாலம் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் கிளை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.