Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சர்வதேச பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து முகாம்.

0

'- Advertisement -

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட சமூக நல அலுவலகம் திருச்சி மற்றும் இறகுகள் அறக்கட்டளை நடத்திய மாபெரும் சர்வதேச பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து முகாமை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் கலந்து கொண்டு முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்

மேலும் மாவட்ட ஆட்சியர் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை வாசிக்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர்

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் மா.நித்யா, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி , திருச்சி கிழக்கு மாவட்ட தாசில்தார் கலைவாணி, சமூக நல அலுவலகத்தின் ஊழியர்கள், இறகுகள் அறக்கட்டளை நிறுவனர் ஜே ராபின், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் மற்றும் தன்னார்வலர்கள் தமிழ் குரல் அமைப்பின் நிர்வாகி தங்கமணி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த ரோஸ் ஜெனிபர், ப்ளோரா ரூபி. பிரமிளா, நிஷா, பிரகதி, காஞ்சனா, மகேஷ் மற்றும் அங்கன்வாடி, ஒருங்கினைந்த சேவை மையத்தை சேர்ந்த பெண்கள் இறகுகள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், கார்த்திக், சூர்யா இறகுகள் தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சத்திரம் பேருந்து நிலையத்திர்க்கு வருகை புரிந்த பயணிகள் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கையெழுத்தை போட்டு இவ் விழிப்புணர்வு நிகழ்விற்கு ஆதரவு தெரிவித்துனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.