தமிழ்நாடு சிலம்ப கோர்வை சங்கம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மறைந்த டாக்டர் ஜெயபாலுக்கு இரங்கல் கூட்டம்.
மருத்துவ வள்ளல் டாக்டர். வி.ஜெயபால் அவர்களுக்கு நினைவஞ்சலி.
கடந்த 06.11.2022 அன்று இயற்கை எய்திய கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளி, திருச்சி ஜீ.வி.என். மருத்துவமனை குழுமம், தமிழ்நாடு சிலம்பக் கோர்வை தலைவரும், அனைவராலும் மருத்துவ வள்ளல் என அன்புடன் அழைக்கப்படும் டாக்டர்.வி.ஜெயபால் அவர்கள் இயற்கை எய்தினார்.
அதனை முன்னிட்டு இன்று திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை சங்கம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிலம்பக் கோர்வை சங்கம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பாக ஏராளமான சிலம்ப மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள், சிலம்ப கோர்வை சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலரத்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை சங்கத்திற்கு புதிய தலைவராக மறைந்த டாக்டர்.வி.ஜெயபால் அவர்களின் மகனும் ஜீ.வி.என்.மருத்துவமனை குழும இயக்குனருமான டாக்டர். வி.ஜெ. செந்தில் அவர்களை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை சங்க துணைத் தலைவர் முனைவர்.மாணிக்கம், என்.கே.ரவிச்சந்திரன்,
செயலாளர் மா.சுந்தரேசன், பொருளாளர் கணேசன் இணை செயளாளர் மனோஜ்குமார் செயற்குழு உறுப்பினர்கள், கலைக் காவேரி சதீஷ்குமார், வா.ஊ.சி.பேரவை கண்ணன், ஆமூர் கண்ணன் மற்றும் இந்திய சிலம்பக் கோர்வை தலைவர் இரா.மோகன் ஆகியோர் பங்கு பெற்றனர்.
மேலும் வருகின்ற 2023 ம் வருடம் மறைந்த டாக்டர்.வி.ஜெயபால் பெரிதும் விரும்பிய சர்வதேச சிலம்ப போட்டியை டாக்டர்.வி.ஜெயபால் நினைவு போட்டியாக நடத்துவது என அனைவரின் ஏக மனதான ஒப்புதலுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

