Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வீடு வீடாகச் சென்று ரீடிங் எடுப்பது போல் ஏன் ஆதாரையும் இணைக்க கூடாது? திருச்சி மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் கேள்வி.

0

'- Advertisement -

வீடு வீடாக சென்று மின் கட்டணம் நிர்ணயிக்கும் நடைமுறை போலவே ஆதார் இணைப்பையும் சாத்தியபடுத்தலாமே…?

இது மக்களுக்கான அரசு என மேடைக்கு மேடை பேசும் தமிழக முதல்வரின் இந்த பேச்சு உதட்டளவில் மட்டுமே உள்ளது என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் சமிபத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பால் திண்டாடி போய்யுள்ளனர் பொதுமக்கள்.

ஏற்கனவே மின்கட்டணம் கண்ணை கட்டிவரும் சூழ்நிலையில்,
ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற முடிவு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட எதேட்சதிகார அடக்குமுறையை போன்றது ஆகும்.

ஏன் ஒவ்வொரு நுகர்வோர் வீட்டிற்கே நேரில் சென்று ரீடிங் எடுப்பது போன்று_ஏன் இந்த ஆதார் இணைப்பையும் சாத்தியமாக்ககூடாது தமிழக நாடு மின்சார வாரியம்…?

இப்படி சிந்தித்தால் மட்டுமே மக்களுக்கான அரசு…!!!

மாறாக ஆதார் எண்ணை இணைத்தால் தான் உனக்கு கரன்ட் என்பது_திமுக தனக்கு தானே வைத்து கொள்ளும் ஷாக் ரீட்மென்ட்.

திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.