நாளை திருச்சி வரும் முதல்வருக்கு திமுக தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்: மகேஷ் பொய்யாமொழி
திருச்சிக்கு நாளை வருகை தரும் ஸ்டாலினுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை .
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி திருவெறும்பூர் தொகுதி, காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களுக்கான புதிய திட்டத்தை தொடங்கி வைக்கவும், திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகில் அமைந்துள்ள கொடி மரத்தில் கழக இருவர்ணகொடியை ஏற்றிடவும் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்கும் வகையில் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

