Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எம்.பி. இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

0

 

திருச்சியில் எம்பி மேம்பாட்டு நிதியில் புதிய பயணியர் நிழற்குடைகள்
திருநாவுக்கரசர் எம்பி இன்று திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தாலுகா அநந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் ஊராட்சி முருங்கைப்பேட்டையில்
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய
பயணிகள் நிழற்குடை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று திறக்கப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன்,சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ்,மாநில செய்தி தொடர்பாளர் பெனட் அந்தோணி ராஜ்,வக்கீல் சந்திரன்,ஏ.ஆர். ராஜலிங்கம் ,அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ச.துரைராஜ், முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் ,
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினர் எ.பி.சுரேஷ் வட்டாரத் தலைவர் கனகராஜ் குழுமணி திருநாவுக்கரசு, கோப்பு ராஜலிங்கம், காவேரி வேலு ,காஜா பாய் .ஆர்சிஎன்பாய். சின்னச்சாமி . கதிர்வேல் ,சந்திரன் செந்தில்குமார் பெரியார் நகர் செல்வம் குமரேசன் வினோத்
திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசம்மூர்த்தி
பெருகமணி ஊராட்சி தலைவர் கிருத்திகா அருண்குமார்,சிவகாமணி பேரூராட்சி தலைவர் சிவகாமசுந்தரி,
வட்டார வளர்ச்சி
அலுவலர்
ஜெரால்ட்
கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன்
ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஷ் கனகராஜ்
ஊராட்சி செயலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்ந்து திருச்சி 61-வது வார்டு ஜே.கே நகரில் கேகே நகர் குடியிருப்பு சங்கத்தின் தலைவரும், முன்னாள் ராணுவ வீரருமான ஜேகே நகர் பகுதி குடியிருப்பு நல சங்கத்தின் தலைவரும் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழக செயலாளருமான கேப்டன் சுப்பிரமணியனின் கோரிக்கையை ஏற்று புதிய பயணியர் நிழற்குடை, திருச்சி 65-வது வார்டு செம்பட்டு பசுமை நகரில் புதிய நியாய விலை கடை , சூரியூர் ஊராட்சியில் புதிய பயணியர் நிழற்குடை ஆகியவற்றை திருநாவுக்கரசர் எம்பி திறந்து வைத்தார்.

தொடர்ந்து 36-வது வார்டு அம்பிகாபுரத்தில் சிமெண்ட் சாலை பணியினை பார்வையிட்டு திருநாவுக்கரசர் எம்பி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருவளர்ச்சோலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம்.பி மேம்பாட்டு நிதியிலிருந்து பெஞ்ச், டெஸ்க் ஆகியவற்றை திருநாவுக்கரசர் எம்.பி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.