Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மீண்டும் யாதவ இளைஞர் கொலை.ஏ டி ஜி பி நேரடி விசாரணை நடத்த வேண்டும்.பாரத முன்னேற்றக் கழக நிறுவனர் பாரதராஜா வேண்டுகோள்.

0

'- Advertisement -

மீண்டும் யாதவ இளைஞர் பலி
நெல்லையில் கொலைகளை தடுக்க அதீத பவருடன் சிறப்பு காவல் படை.

ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் நேரடி விசாரணை.

பாரத முன்னேற்றக் கழகத் தலைவர் பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்.

இதுகுறித்து பாரத முன்னேற்றக்கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலைய பகுதியில் 21.11.2022 அன்று நடுக்கல்லூர் நடுத்தெருவில் வசிக்கும் யாதவ சமுதாயத்தினை சேர்ந்த குமாரவேல் என்பவரின் மகன் நம்பி என்ற இளைஞர் மாற்று சமுதாயத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அமைதியாக வாழும் யாதவ சமுதாய பிரமுகர்கள் திட்டமிட்டு
கூலிப்படையினராலும்,சிறுவர்களாலும் கொல்லப்பட்டு வருவது வேதனையான செயல்,கண்டிக்கத்தக செயலுமாகும்.

நெல்லை சுடலைமடை ஆண்டவர் கோயில் மாயாண்டி கோனார் கொல்லப்பட்ட சுவடுகள் கூட மறையவில்லை ஆனால்
இன்னொரு யாதவ இளைஞர் பலியாகியுள்ளார்.

பலியான யாதவ இளைஞர் நம்பி

நெல்லையில் கொல்லப்பட்ட யாதவ இளைஞர் நம்பி.

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உளவுத்துறை அறவே செயல்படவில்லை என்றும்,கொலையாளிகளுக்கு மாவட்ட காவல்துறையின் மீது குண்டூசி அளவு கூட பயமில்லை என்றும் அதனாலேயே நித்தமும் கொலைகள் அரங்கேறுகின்றது என்றும் தொடர்ந்து கூறி வரும் பாரத முன்னேற்றக் கழகத்தின் கருத்து உண்மைதான் என்பதை பறைசாற்றும் விதமாக அடுத்த பலி நடந்தேறியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட யாதவ சமுதாயத்தினை சேர்ந்தோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்

வருடம் ,மாதங்கள் போய் இப்போ வாரம் ஒரு பலி திட்டமிட்டு மாற்று சமுதாயத்தினரால் நடந்து வருகின்றது

ஆனால்… இதுவரை தமிழக காவல்துறை இயக்குனரோ
ல்அல்லது காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர்களோ,உளவுத்துறை மேலதிகாரிகளோ அல்லது அரசின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளோ எட்டிக்கூட பார்க்கவில்லையே….எதிர்க் கட்சிகளோ ஒரு கண்டன அறிக்கைக்கு கூட லாயக்கில்லை.

திரும்பத் திரும்ப நாங்கள் சொல்வது.., கொலை சம்பவத்தில் ஈடுபடுவது கூலிப்படைகள்தான் ,கைது செய்யப்படுபவர்கள் எல்லாம் ரவுடியாக ,கொலைக்காரனாக பெயரெடுக்க் ஆசைப்பட்டு வருபவர்கள்தான்.இது உலகமறிந்த விசயம்…

ஆனால் எல்லாம் அறிந்த காவல்துறையினரும்,தமிழக அரசும் கொலைச்சம்பவங்களை தடுக்க எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஏதும் எடுத்தது போல் தெரியவில்லை- இது புரியாத புதிராகவே இருக்கின்றது.

திமுக ஆட்சிக் கட்டிலில் அமருவதற்காக ஒட்டுமொத்த விசுவாசத்தினையும் வாக்குகளாக வாரி வழங்கிய யாதவர்கள் இன்று தொடர்ந்து கொல்லப்படுகின்றனர்.
சாதிக்கலவரத்தினை தூண்டும் விதமாகவே கூலிப்படையினரால் மேற்கொள்ளப்படும் இக்கொலைகளால் மெல்ல ,மெல்க நெல்லை மாவட்டம் சுடுகாடாக மாறிவிடும் சூழல் வந்துவிடுட்டது என்பதே நிதர்சமான உண்மை

ஆகவே.,தமிழக முதல்வரும், காவல்துறை தலைமை இயக்குனரும் உடனடியாக ஏ.டி.ஜி.பி.அந்தஸ்திலான நேர்மையான அதிகாரி ஒருவரை நெல்லைக்கு அனுப்பி கள ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்

,அதோடு மட்டுமின்றி அதீத பவர் வாய்ந்த சிறப்பு காவல்படையை நியமித்து தொடர்ந்து யாதவர்களை கொலை செய்த,,கொலை செய்யமுனையும் குற்றவாளிகள் மீதும்,கூலிப்படையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்நடவடிக்கையால் இனி நெல்லையில் யாதவர்கள் மட்டுமல்ல எந்த ஒரு சமுதாயத்தினை சேர்ந்த எவரொருவரும் அநியாயமாகக் கொல்லப்படக்கூடாது என்பதே பாரத முன்னேற்றக் கழகத்தின் வேண்டுகோளாகும்

இவ்வாறு பாரதராஜா யாதவ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.