திருச்சியில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி துறையூர் மருத்துவமனை அன்னை சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான்.
உலகளவில் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவருகிறது. இந்நோய் அதிகரிக்கும் பட்சத்தில் கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்பு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது,
இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை மற்றும் நீரிழிவு நோய் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துறையூர் அன்னை மருத்துவமனை மற்றும் திருச்சி நீரிழிவு மருத்துவர்கள் சங்கம் சார்பில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு வாக்கத்தான் இன்று திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி மணிவாசகன் நடை பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி அருகில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரையிலான வாக்கத்தான் நடைபயணத்தில் திருச்சி காவேரி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று விழிப்புணர்வு வசனங்கள் எழுதிய பாதகைகள் ஏந்தி நடந்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியினை துறையூர் அன்னை ஹாஸ்பிடல் இயக்குனர் விஜயகுமார் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார்.