காவேரி மேம்பாலம் இருசக்கர வாகன வழித்தடம் சீரமைப்பு. மநீம கோரிக்கையை ஏற்றதற்கு வழக்கறிஞர் கிஷோர் குமார் நன்றி.
நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்த மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி மேம்பாலம் தற்பொழுது மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மேற்படி மேம்பாலம் வழியாக அனுமதிக்கப்படும் இருசக்கர வாகனங்கள் காவிரி மேம்பாலத்தில் பயணிக்க முடியாத அளவில் உள்ளதை மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் கடந்த 31.10.2022ந் தேதி சுட்டிகாட்டியிருந்தோம்.
இதனிடையே மேற்படி இரு சக்கர வழித்தடம் சீரமைக்கப்பட்டுள்ளதை வரவேற்பதோடு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்களையும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவித்துகொள்கிறோம்.
என திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் வக்கீல் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.