திருச்சி மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது .
திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு திருச்சி இபி ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த நிம்ரோஸ் ராஜன் (வயது 39) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தார். அவரை உடனடியாக கோட்டை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பாலகுமார் (வயது 26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர். திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பூங்கா அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மணிகண்டன் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை தில்லை நகர் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.திருச்சி உறையூர் பெரியார் மாளிகை அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நாகேந்திர பிரசாத் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அபுதாகிர் (வயது 26) என்ற வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 5 பேர் மீது திருச்சி மாநகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது