திருவரங்கத்தில் ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணத்தை திருடிய 2 பேர் கைது.
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் கோகுலம் காலனியை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ். இவரது மகன் ஆரோக்கிய ரிச்சல் (வயது 21)
சம்பவத்தன்று இவர் அரசு பஸ்சில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது இவர் அருகில் நின்ற ஒரு பெண் உள்பட இரண்டு பேர் ஆரோக்கிய ரிச்சல் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடி கொண்டு ஓட முயன்றனர். அப்பொழுது அங்கிருந்தவர்கள் 2 பேரை பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்திய போது இருவரும் அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர்வர்கள் என்பதும், சாதிக் அலி என்பவரின் மனைவி பான்டி பீவி (வயது 32),அப்துல் ரசாக் மகன் ஷாகுல் அகமது (வயது 42) என்பது தெரிய வந்தது.
பிறகு இரண்டு பேரையும் கோட்டை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.